என்னது! நான் மன்னிப்பு கேட்டேனா.! வனிதாவை கிண்டல் செய்து விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட வீடியோ!
Nanjil vijayan tweet about abology for vanitha
நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கணவர் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் சூர்யா தேவி என்ற பெண், நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பலரும் ஏராளமான கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில் சமீப காலமாக நாஞ்சில் விஜயன் மற்றும் வனிதாவிற்கு இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் இருவரும் மாறிமாறி ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசிக்கொள்வது, புகைப்படங்களை வெளியிடுவதாக இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வனிதா, நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் நாஞ்சில் விஜயன், தனது டுவிட்டரில் ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்க்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள் என பதிவிட்டிருந்தார். மேலும் வனிதாவை கிண்டல் செய்யுமாறு நான் மன்னிப்பு கேட்டேனா என கேப்ஷன் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.