இதுதான் என் சினிமா கேரியரில் நான் செய்த மிகப்பெரிய தவறு.! முதன்முறையாக வெளிப்படையாக போட்டுடைத்த நயன்தாரா!
nauanthara talk about kajini movie
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பார்ப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . இவருக்கென ஏராளமான ரசிங்கர் பட்டாளமே உள்ளது.
நயன்தாரா பல சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏறி மிதித்து, தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். மேலும் சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவந்த நயன்தாரா தற்போது மீண்டும் மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும் அவரது நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா ரேடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனது கேரியரில் நான் செய்த மிகப் பெரிய தவறு கஜினி படத்தில் நடித்ததுதான். அந்தப் படத்தின் கதையை நான் கேட்டபோது அதில் எனது கதாபாத்திரம் அசினுக்கு இணையாக வேறு மாதிரி இருந்தது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை அப்படியே வேறுவிதமாக மாற்றி காட்டியிருந்தனர். அது பெரும் ஏமாற்றமாக இருந்தது அதற்கு பிறகுதான் நான் கதைகளை கவனமாகக் கேட்க ஆரம்பித்து நடிக்கத் தொடங்கினேன்’ என்று தெரிவித்துள்ளார்.