×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினி பட வில்லன் நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Navasutheen siddiq wife send divorce notice

Advertisement

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்,  ராமன் ராகவ் 2.0, ரயீஸ், போட்டோகிராஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இவரது மனைவி ஆலியா.  இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு யானி சித்திக், ஷோரா என இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் நவாசுதின் தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் புதனாவிற்கு  சென்றுள்ளார்.

 

இந்நிலையில் நவாசுதீன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கருத்துவேறுபாடு மற்றும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆலியா தனது வழக்கறிஞர் மூலமாக விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இதற்கு நவாஸுதீன்  எந்த பதிலளிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த நவாசுதீன், அண்மையில் என் தங்கை இறந்துவிட்டார். என் 71 வயது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. இதனால் தான் ஊருக்கு வந்தேன். புதனாவில் உள்ள எங்கள் வீட்டில் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தயவு செய்து இதுகுறித்து தற்போது என்னால் எதுவும் கூற முடியாது அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Navadutheen #petta
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story