அஜித்துக்கு தம்பியாக நடித்தவரா இது? இப்படி மாறிவிட்டாரே.! வைரலாகும் ஷாக் புகைப்படம்!!
Navdeep latest sixpack photo viral
தமிழ்சினிமாவில் ஜெய்ராம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நவ்தீப். அதனை தொடர்ந்து அவர் அறிந்தும் அறியாமலும், ஏகன் இளவட்டம், அ ஆ இ ஈ, இது என்ன மாயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ்மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கெனவே தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
நடிகர் நவ்தீப் தற்போது வீரமாதேவி சீறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அப்படத்திற்காக நவ்தீப் 6 மாதங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் இத்தகைய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.