"நாயகன் படத்தினால் எனக்கு இவ்வளவு பணம் நஷ்டம்" தயாரிப்பாளர் குஞ்சுமோன் பேட்டி!
நாயகன் படத்தினால் எனக்கு இவ்வளவு பணம் நஷ்டம் தயாரிப்பாளர் குஞ்சுமோன் பேட்டி!
தமிழ் சினிமாவின் கேங்ஸ்டர் படங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது மணிரத்னம் இயக்கிய "நாயகன்" திரைப்படம் தான். 1987ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமலஹாசன், சரண்யா, ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இன்று வரை அனைவராலும் பேசப்படும் ஒரு தரமான கேங்ஸ்டர் படமாக இருக்கும் நாயகன், விரைவில் ரீ- ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் நாயகன் ரீ-ரிலீஸ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான கே.டி குஞ்சுமோன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நாயகன் படம் குறித்து பேசியிருந்தார். அதில் அவர், "நாயகன் படத்தின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், என்னை நாயகன் படத்தை வாங்கிக்கொள்ள சொன்னார்.
விருப்பமில்லாமல் 25லட்சத்திற்கு அந்தப் படத்தை வாங்கி, நான் வெளியிட்டேன். என்னால் தான் அந்தப் படம் வெளியானது. ஆனால் எனக்கு அதனால் 50000 நஷ்டம் தான் ஏற்பட்டது. கமலும், மணிரத்னமும் சிறப்பாகத்தான் செய்திருந்தனர். ஆனால் அது கமர்ஷியல் ஹிட்டாகவில்லை" என்று குஞ்சுமோன் கூறியுள்ளார்.