என்னது.. நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா.! ஏன்? என்னாச்சு? வெளிவந்த தகவல்!!
என்னது.. நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா.! ஏன்? என்னாச்சு? வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள், திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாமல் திடீரென அவர் வாந்தி எடுத்ததாகவும், அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
ஆனால் இது ஒருபுறமிருக்க நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பொய்யானது. அவருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.