அடேங்கப்பா.. தனது இரட்டை குழந்தைகளுக்காக வழக்கத்தை மாற்றி நயன்தாரா எடுத்த முடிவு.! பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள்!!
அடேங்கப்பா.. தனது இரட்டை குழந்தைகளுக்காக வழக்கத்தை மாற்றி நயன்தாரா எடுத்த முடிவு.! பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து திருமணமான 4வது மாதத்திலேயே விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி விட்டதாக அறிவித்தார். இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.
ஆனால் திருமணமான 4வது மாதத்திலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் தீவிர விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதும், அவர்கள் எந்த சட்டங்களையும் மீறவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
நடிகை நயன்தாரா தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நவம்பர் 28ஆம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் அவர் தனது மகன்களுக்காக வழக்கத்தை மாற்றி இம்முறை வீட்டிலேயே தனது குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிறந்தநாளன்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.