தன் காதலருக்கு லேடி சூப்பர்ஸ்டார் கொடுத்த அசத்தலான காஸ்ட்லி கிஃப்ட்! அதுவும் என்ன? எத்தனை கோடி தெரியுமா??
தன் காதலருக்கு லேடி சூப்பர்ஸ்டார் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்! அதுவும் என்ன? எத்தனை கோடி தெரியுமா??
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே மாபெரும் பிரபலமாக விளங்கி வரும் அவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக கோவிலுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது என நெருக்கமாக இருந்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கிடையில் தற்போது நடிகை நயன்தாரா தனது வருங்கால கணவருக்கு சிகப்பு நிற காஸ்ட்லி ஃபெராரி காரை பரிசளித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அந்தக் காருடன் இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். அந்த சொகுசு காரின் விலை 7.5 கோடி என கூறப்படுகிறது.