வாவ்.. சூப்பரு! நயன்தாராவிற்கு சமந்தா கொடுத்த அசத்தலான கிஃப்ட்! ஏன்? என்னனு பார்த்தீங்களா!!
வாவ்.. நயன்தாராவிற்கு சமந்தா கொடுத்த அசத்தலான கிஃப்ட்! ஏன்? என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. அவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நயன்தாரா, சமந்தாவிற்கு கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது அவர் டியர் கதிஜா வித் லவ் கண்மணி என எழுதிய வாழ்த்து அட்டையையும், கம்மல் ஒன்றையும் பரிசளித்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.