"படம் இயக்க போகும் நயன்தாரா!" ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
படம் இயக்க போகும் நயன்தாரா! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
2005ம் ஆண்டு "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள நயன்தாரா, 2010ம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வரும் நயன்தாரா, கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.
தற்போது நயன்தாரா நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் "அன்னபூரணி" மற்றும் டியூட் விக்கி இயக்கத்தில் "மண்ணாங்கட்டி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் "புதிய தொடக்கங்களின் மேஜிக்கை நம்புங்கள்" என்ற கேப்ஷனுடன் கேமராவை இயக்குவது போல் படப்பிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நயன்தாரா. இதனால் நயன்தாரா இயக்குனராக அறிமுகமாகிறாரா? என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.