சமந்தாவை கட்டியணைத்து, செம ஹேப்பியில் நயன்! அட.. ஏன்னு பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!
சமந்தாவை கட்டியணைத்து, செம ஹேப்பியில் நயன்! அட.. ஏன்னு பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்களுக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடித்ததற்கு பிறகு நயன்தாரா, சமந்தா இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
மேலும் சமீபத்தில்கூட நயன்தாரா தங்கம் மற்றும் வைரத்தாலான கம்மல் ஒன்றை சமந்தாவிற்கு பரிசாக அளித்திருந்தார். இந்நிலையில் நயன்தாரா, சமந்தாவை கட்டியணைத்தப்படி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து நயன்தாரா செம ஹேப்பியாகி சமந்தாவை கட்டியணைத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.