விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் புகைப்படம் முதன்முறையாக ரிலீஸ்!. நயனுக்கு என்ன ரோல் தெரியுமா?
nayanthara in vishwasam movie first look
பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார்.
விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவும், அஜித்துடன் 4 ஆவது முறையாக கைகோர்த்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர் என வெளியான அனைத்திலுமே அஜித்தின் லுக் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நயன்தாராவின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சேலை அணிந்து, கழுத்தில் நகைகள், நெற்றி வகிட்டில் குங்குமம் என இருக்கும் நயன்தாரா இதில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார் என்பது இந்த புகைப்படம் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட விஸ்வாசம் படத்தின் நயன்தாராவின் லுக் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.