சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாரா.. அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்.!
சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாரா.. அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றுள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. இவன் பின்னர் இவருடைய சினிமா மார்க்கெட் சரிந்தது என்பதுதான் உண்மை.
மேலும் ஒரு சில திரைப்படங்களில் தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் வெற்றியின் காரணமாக சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார்.
இது போன்ற நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அன்னபூரணி இப்படத்தில் சம்பளமாக மிகப்பெரிய தொகையை நயன்தாரா கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியில் தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.