அம்மாடியோவ்..போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய வீட்டின் விலை இவ்வளவா! கேட்டா ஆடிபோயிருவீங்க!
அம்மாடியோவ்.. போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு பார்த்தீங்களா! தலைசுற்றிபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.
நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்த அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது நயன்தாரா போயஸ் கார்டனில் பிரபல அப்பார்ட்மெண்ட்டில் இரு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இரண்டுமே 4BHK வீடுகளாம். மேலும் நயன்தாரா வாங்கியுள்ள ஒரு வீட்டின் விலை 18 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. விரைவில் நல்லநாள் பார்த்து அவர் புதிய வீட்டில் குடியேற உள்ளதாகவும், பின்னர் விக்னேஷ் சிவனுடன் அவரது திருமண வேலைகள் தொடங்கும் எனவும் செய்திகள் பரவி வருகிறது.