தர்பார் படத்தின் முதல் புல்லட்! நயன்தாரா வெளியிட்ட ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் உற்சாகம்
Nayanthara reveals about darbar update
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தினை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தர்பார் படத்தின் புதிய அப்டேட் ஒன்று நாளை வெளியாகவுள்ளது என அந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புதிய அப்டேட் என்னவாக இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.