நயன்தாரா நடிச்சதுல அவருக்கு பிடிக்காத படம் இந்த மெகாஹிட் திரைப்படம்தானாம். எந்த படம் தெரியுமா?
Nayanthara unlike movie in her cinema history
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான இடத்தில் இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இன்று அஜித், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
பல்வேறு சர்ச்சைகள், தோல்விகளை சந்தித்து இன்று நம்பர் ஒன் என்ற இட்டதில் இருக்கும் நடிகை நயன்தாரா தனது சினிமா வாழ்க்கையில் அந்த ஒருபடத்தில் தான் நடித்தது மிகவும் வருத்தமளிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-அசின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கஜினி படத்தில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை அசினுக்கு இணையாக தனது கதாபாத்திரமும் இருக்கும் என தான் நினைத்ததாகவும், ஆனால் படம் வெளியான பிறகு தான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்ததாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.
அதில் இருந்து தான் நடிக்கும் படங்களின் கதையை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து நடித்துவருவதாக நயன்தாரா கூறியுள்ளார். இந்நிலையில் கஜினி படத்திற்கு அடுத்து தற்போது மீண்டும் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்துவருகிறார் நயன்தாரா.