நயன்தாரா, யோகி பாபு காதலுக்கு பெருகி வரும் ஆதரவு!!
நயன்தாரா, யோகி பாபு காதலுக்கு பெருகி வரும் ஆதரவு!!
நயன்தாரா சமீப காலங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது திறமையான நடிப்பால் தென்னிந்தியாவையே கலக்கும் முன்னணி நாயகியாகிவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா படம் ரசிகர்களிடையே நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு முன்னணி நடிகரும் இல்லாமல் படம் இந்த அளவிற்கு வெற்றிபெற்றதற்கு காரணம் நயன்தாராவிற்கு இருக்கும் ரசிகர்களால் தான்.
மேலும் இந்த படம் செம்ம வெற்றிபெற பெற ‘ எனக்கு கல்யாண வயசு ஆகிடுச்சு ‘ என்ற பாடலும் கூட ஒரு பெரிய காரணம்.
இப்பாடல் யூ-டியூபில் தற்போது வரை 5 கோடி பேர் பார்த்துரசித்துள்ளார்களாம். எந்த ஒரு முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு பாடலை இவ்வளவு பேர் பார்த்திருப்பது பெரும் சாதனை தான் என பலரும் கூறி வருகின்றனர்.