வாவ்.. ஆரஞ்சு உடையில் அழகு தேவதையாய் பளபளக்கும் நடிகை நஸ்ரியா! ரசிகர்களை கவர்ந்த கியூட் புகைப்படங்கள்!!
வாவ்.. ஆரஞ்சு உடையில் அழகு தேவதையாய் பளபளக்கும் நடிகை நஸ்ரியா! ரசிகர்களை கவர்ந்த கியூட் புகைப்படங்கள்!!
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த நேரம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜாராணி படத்தில் செம கியூட்டாக நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பு இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து நஸ்ரியா நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பு மற்றும் கியூட்டான சிரிப்பிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நஸ்ரியா கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் பெருமளவில் நடிக்காத அவர் தற்போது நான் ஈ பட நடிகர் நானியுடன் அடடே சுந்தரா! என்ற படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நஸ்ரியா தற்போது ஆரஞ்சு நிற உடையில் செம கியூட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.