அப்படி நடந்தா, சினிமாவை தடைசெய்யலாமா? நீட் விவகாரம்! நடிகர் சூர்யாவிற்கு எதிராக குரலெழுப்பிய காயத்ரி ரகுராம்!
NEET issues Kayathri raguram tweet against surya
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இதற்கிடையே நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் நீட்தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் மாணவர்களின் மரணத்தால் மன உளைச்சல் அடைந்த நடிகர் சூர்யா கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்தப்படுத்தபடுவது வேதனையளிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும் என வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளிக்கும் வகையில் நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது
ரசிகர்கள் கொண்டாட பேனர்கள் வைக்கிறார்கள். அந்த பேனர்கள் விழுந்து ரசிகர்கள் உயிரிழந்தால் சினிமாவையே தடைசெய்ய கோரிக்கை வைக்கலாமா? தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் நாள்தோறும் தேர்வுதான் என கூறியுள்ளார்.