ஒருநாள் இரவு படுக்கைக்கு அழைத்த நபரின் விவரங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை
neha saxena reveals the man called for a night
வாட்ஸாப் மூலம் நடிகை நேஹா சக்சேனாவை ஒருநாள் இரவு தன்னுடன் தங்க ஏற்பாடு செய்ய முடியுமா என நடிகையின் மேனேஜரிடம் கேட்ட நபரின் புகைப்படம் மற்றும் நம்பரை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை நேஹா சக்சேனா.
மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நேஹா சக்சேனா. இவர் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த ‘கசாபா’ படத்தில் நடித்தவர். இவர் மோகன்லால் படத்தில் கூட நடித்துள்ளார். மேலும் தமிழிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் வேலை பார்க்கும் நெல்சன் என்பவர் நடிகை நேஹாவின் மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நேஹா ஒரு நாள் இரவு மட்டும் துபாயில் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மேனேஜர் அந்த நபரை பற்றி ஊடகங்களில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த நபரை நடிகை நேஹா வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார். அந்த நபரோ யாரோ தனது நம்பரை ஹேக் செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.