உங்கள் எடை எவ்வளவு... கடுப்பான பாக்கியலெட்சுமி சீரியல் நடிகை நேஹா கூறிய பதிலை பாருங்கள்.!
உங்கள் எடை எவ்வளவு... கடுப்பான பாக்கியலெட்சுமி சீரியல் நடிகை நேஹா கூறிய பதிலை பாருங்கள்.!
நடிகை ராதிகா நடிப்பில் ஒளிப்பரப்பான வாணி ராணி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை நேஹா. இவர் தற்போது விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கிய லெட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
நேஹா எப்போதும் சமூக வலைத்தள ஊடகமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரது எடை எவ்வளவு என்று கேட்க அவரை கடுப்பேத்தியுள்ளார்.இதற்கு பதிலளித்த நேஹா எப்போதும் ஒருவரின் எடை பற்றியே ஏன் கவலைப்படுகிறீகள், என் எடையை தெரிந்து கொள்வது என்ன ஒரு பொதுஅறிவா.? இல்லையே.. பின்னர் அதை தெரிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
மேலும் எடை மூலம் என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அப்படி ஒன்றும் என்னை தெரிந்து கொள்ள வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுப்படுவது இது முதல் முறை அல்ல என கோபமுடன் கூறி இருக்கிறார்.