களைகட்ட துவங்கிய கொண்டாட்டங்கள்.! வைரலாகும் பிரம்மாண்டமான புகைப்படத்தால் கெத்து காட்டும் தல ரசிகர்கள்!!
nerkonda parvai poster in sathyam theatre viral
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனைத் தொட்ர்நது படம் படம் ஆகஸ்ட் 8 ல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
மேலும் இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் பிரபலமான தியேட்டரான சத்யம் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படத்திற்காக மிகவும் பிரமாண்டமான பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.