அட இதை ஏன் எல்லாரும் எனக்கு அனுப்புறிங்க.. டென்ஷனான வனிதாக்கா! ஏன்னு பார்த்தீங்களா!
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி, பெரும் பாதிப்புகளை
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் குவிகின்றனர்.
மேலும் இளம்வயதினர், வயதானவர்கள் என பலரும் உயிரிழக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏராளமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற கோயம்புத்தூரில் கொரோனா தேவி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் புகைப்படம் வைரலான நிலையில் கொரோனா தேவி சிலை பார்ப்பதற்கு வனிதா போல இருப்பதாக அவருக்கு நெட்டிசன்கள் டேக் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் டென்ஷனான வனிதா, என்ன இது.. இதை ஏன் எல்லாரும் எனக்கு அனுப்புறீங்க? எனக் கேட்டுள்ளார்.