சர்க்கார் திரைப்படம் வெளியாவதில் புது சிக்கல்? வரும் ஆனா வராது!
New problem to sarkar movie
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்க்கார் திரைப்படம் வெளிவருவதில் புது சிக்கல் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சர்க்கார் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்க்கார் கதை திருடப்பட்ட கதை என்றும், இயக்கினார் முருகதாசின் துணை இயக்குனர் ஒருவரின் கதை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் வருண் என்பவர் 'செங்கோல்' என்று பெயரில் ஒரு கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்தாராம். அந்த கதையை திருடித்தான் இந்த சர்கார் படம் உருவாகிறது என்று புகார் கூறியுள்ளார். அது பற்றி எழுத்தாளர் சங்கம் விசாரனை நடத்தி வருகிறது என்ற புதிய செய்தி கிளம்பியுள்ளது.
இதன் முடிவு என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்