சிம்புவுடன் கைகோர்க்கும் பிரபல நடிகை! யார் அந்த அதிர்ஷ்டசாலி?
next simbu film heroine
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படம் 'மாநாடு'. இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த நடிகை ரசி கண்ணா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் சிம்பு சில காலங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார் சிம்பு. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை வைத்து மூன்று படங்கள் இயக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் புகழாரம் சூட்டினார்.
தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள், அடங்கமறு ஆகிய படங்களில் நடித்த நடிகை ரசி கண்ணா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை பற்றி படக்குழுவினர் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.