வெளியானது சூர்யாவின் வெறித்தனமான NGK டீசர்! உற்சாகத்தில் ரசிகர்கள்
NGK teaser released
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
அரசியலை மையமாக கொண்ட இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் என்.ஜி.கே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வளியாகின.
நடிகர் சூர்யாவின் என்ஜிகே படத்தின் டீசர் வெறித்தனமா இருக்கு என்று நடிகரும் அவரது தம்பியுமான கார்த்தி ஏற்கனவே தெரிவித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இன்று NGK படத்தின் வெறித்தனமான டீசர் வெளியானது. அதிரடியான அரசியல் கதையை கொண்டுள்ள இந்த டீசரால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.