கமலுக்கு மகளாக நடித்தது எனக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்! உற்சாகத்தில் மூழ்கிய பிரபல நடிகை!
nivedaha thamas happy to act kamal
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது கதாநாயகியாக களமிறங்கி தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். மேலும் அவர் தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை நிவேதா தாமஸ் பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் எனது 8 வயதிலேயே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். மேலும் அதற்காக கேரள அரசிடம் விருதும் வாங்கியுள்ளேன். என்னைப் போல குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பலரும் சில காலங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர். ஆனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்ததை தொடர்ந்து தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடிகர், நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால்தான் படம் ஓடும் ஏனெனில் சினிமாவில் கதைதான் ஆத்மா.அதற்கே நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
மேலும் நான் கமல்ஹாசனின் தீவிர பக்தை. இந்நிலையில் பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாக நான் நடித்தது எனக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்.அதை நான் என் வாழ்நாளில் மறக்க முடியாத பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன்.
எந்த ஒரு நடிகையையும் மற்ற நடிகையுடன் ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. நடிகைகளை நடிகர்களோடு ஒப்பிட்டு பேசும் நிலை வர வேண்டும். யாரையும் போட்டியாக நான் நினைத்தது கிடையாது என அவர் கூறியுள்ளார்.