"பாலியல் கல்வியால் பயனில்லை. விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்" ஓவியா ஓபன் டாக்.!
பாலியல் கல்வியால் பயனில்லை. விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் ஓவியா ஓபன் டாக்.!
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஓவியா, 2010ம் ஆண்டு வெளியான "களவாணி" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் மன்மதன் அம்பு, கலகலப்பு, மூடர் கூடம், மெரினா, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் எந்தப் படமும் சரியாக ஓடாத காரணத்தால், ஓவியாவுக்கு மேலும் வாய்ப்புகள் வரவில்லை. எனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தன் குழந்தைத்தனமான மற்றும் வெளிப்படையான செயல்களால் அனைவரையும் கவர்ந்தார்.
பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓவியா திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும் ஓவியா இன்னும் திருமணமும் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் ஓவியா, "பாலியல் கல்வியால் என்ன பயன்? எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் கலாச்சாரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார்கள். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால் பாலியல் குற்றங்கள் குறையும்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.