அட.. பாசத்தை பொழியுறாரே.! சினிமாவிற்கு தாவிய பாக்கியா! அதுவும் யாருடன் தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!
அட.. பாசத்தை பொழியுறாரே.! சினிமாவிற்கு தாவிய பாக்கியா! அதுவும் யாருடன் தெரியுமா?? வைரல் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் தற்போது மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது. இந்த சீரியலுக்கென ஏராளமாக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் குடும்பம் மட்டுமே கதி என அப்பாவி இல்லத்தரசியாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் சுசித்ரா. குடும்பத்தலைவிகள் பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகிறது. இதில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.