அந்தக் காட்சியில் நடித்ததால் வெடித்த பிரச்சனை! பல உண்மைகளை உடைத்து மறைந்த நடிகை சித்ராவின் தாயார் கதறல்!
மறைந்த நடிகை சித்ராவின் தாயார் விஜயா மறைந்த தனது மகள் மற்றும் அவரது கணவர் ஹேமந்த் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
பிரபல பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்த நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு ஹேமந்த் என்பவருடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர்தான் என உறுதி செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் தொடர்ந்து ஆர்டிஓ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்ராவின் தாயார் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவன்தான் அடித்து கொன்று விட்டான் என கூறியுள்ளார்.
மேலும் சித்ராவிற்கு எந்த ஒரு அரசியல் பிரபலங்களுடனும் தொடர்பு கிடையாது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா நடிகர் குமரனுடன் நெருக்கமாக நடித்தது ஹேமந்த்க்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் சந்தேகப்பட்டு சித்ராவை தொடர்ந்து நச்சரித்து வந்தார். மேலும் சீரியலில் நடிக்க கூடாது எனவும் வற்புறுத்தி வந்தார். மேலும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முதலிரவு காட்சியில் நடித்த பிறகுதான் இருவருக்கும் பிரச்சினை பெரிதானது என கதறியவாறு பல உண்மைகளை சித்ராவின் தாயார் விஜயா கூறியுள்ளார்.