பாண்டியன் ஸ்டோர் நடிகருக்கு விஜய் வீட்டிலிருந்து வந்த அழைப்பு! ஏன் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்!
Pandian store Venkat invited by director SA Chandrasekar
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். இத்தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வெங்கட் ரங்கநாதன். அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கட், நடிகர் விஜய்யின் தந்தையும், பழம்பெரும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார். மேலும் இத்தகைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர் அதில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை போனில் அழைத்தார். என்னை அவர் அழைக்க காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேடம்தான். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மிகப்பெரிய ரசிகர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சார் அவரது படத்திற்காக புதிய நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேடம் தான் என்னை பரிந்துரை செய்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இவை அனைத்தும் கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா அனைத்தையும் மாற்றி விட்டது.
கொரோனா எனது உட்பட எல்லோருடைய வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது. ஆனால் நான் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது மகிழ்வான விஷயம். இதேபோல் ஒருநாள் தளபதி விஜய்யையும் சந்திக்க வேண்டும் என நடிகர் வெங்கட் பதிவிட்டுள்ளார்.