ப்பா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது! முழு மேக்கப்பில் வேற லெவலில் எப்படியிருக்காரு பாத்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் இவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்தவர் நடிகை சித்ரா.
இவர் கடந்த டிசம்பர் மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் காவ்யா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவ்வாறு அவர் தற்போதும் முழு மேக்கப்பில் ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தீயாக பரவி வருகிறது.