கண்களை கடலாக்கியது.. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.! உணர்ச்சிவசமாக பார்த்திபன் வெளியிட்ட பதிவு.!
கண்களை கடலாக்கியது.. போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.! உணர்ச்சிவசமாக பார்த்திபன் வெளியிட்ட பதிவு.!
வித்தியாசமான படைப்புகளை கொடுக்கக்கூடிய இயக்குநர் ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டீன்ஸ். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
பார்த்திபனின் டீன்ஸ்
13 சிறுவர், சிறுமியர்கள் நடித்துள்ள இந்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 படத்துடன் வெளிவந்தது. டீன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. இதனால் இயக்குனர் பார்த்திபன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: பார்த்திபனின் வித்தியாச படைப்பு டீன்ஸ்.! மூன்று நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா??
உணர்ச்சிகரமான பதிவு
இந்நிலையில் அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், Thanks friends For your unlimited love&support. நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது! நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை screens? எவ்வளவு collections ? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.
போதும் இந்த ஆனந்தக் கண்ணீர். கோடிகளை என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பார்த்திபனின் வித்தியாச படைப்பு டீன்ஸ்.! மூன்று நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா??