தல படத்திற்கு இப்படியொரு அரசியல் கலந்த வாழ்த்தா? பிரபல நடிகர் செய்துள்ள வேலையை பார்த்தீர்களா!!
parthiban wish for nerkonda movie
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும் படம் முழுவதும் லீக் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு வாழ்த்து கூறி பிரபல நடிகர் பார்த்திபன் அவரது கோணத்தில் வித்தியாசமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
நேரு கொண்ட பார்வை
காங்கிரஸ் கொண்ட பார்வை
Bjp கொண்ட பார்வை
காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்! என குறிப்பிட்டுள்ளார்.