புற்றுநோயால் மறைந்த விஜே ஆனந்தகண்ணன்! முக்கியமான நாளில் மனைவி வெளியிட்ட எமோஷனல் பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!!
புற்றுநோயால் மறைந்த விஜே ஆனந்தகண்ணன்! முக்கியமான நாளில் மனைவி வெளியிட்ட எமோஷனல் பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!!
சன் மியூசிக் சேனல் ஆரம்பமான காலத்திலேயே எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இளம் பெண்ணை பின்தொடர்ந்த மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் விஜே ஆனந்த கண்ணன். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் அசத்தலாக தொகுத்து வழங்கியுள்ளார். ஆனந்த கண்ணன் சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்துள்ளார்.
சிங்கப்பூர் தமிழரான அவர் கிராமிய கலைகளின் மீது மிகுந்த பற்று கொண்டு அங்கு தமிழர்களின் கிராமிய கலைகளை பரப்பும் வகையில் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் ஆனந்தகண்ணனின் பிறந்தநாள் சென்றுள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கடந்த வருடம் ஆனந்த கண்ணன் கேக்குடன் இருப்பது போன்று எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார். அந்த எமோஷனல் பதிவு வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.