"குடிபழக்கத்தினால் தான் எனக்கு இந்த நிலைமை" பிக்பாஸ் தாமரையின் மனம் திறந்த பேட்டி..
குடி பழக்கத்தினால் தான் எனக்கு இந்த நிலைமை பிக்பாஸ் தாமரையின் மனம் திறந்த பேட்டி..
நாடக நடிகராக "பிக் பாஸ்" வீட்டிற்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர்களை பிடித்தார் தாமரை. நாடகங்களில் நடிப்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க துவங்கினார்.
அந்த அனுபவங்களை பகிர்ந்த அவர் நாடகங்களை விட சின்னத்திரை தொடர்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவும் நாடகங்களில் தான் நினைத்ததை செய்யலாம் என்றும் ஆனால் சீரியலில் டைரக்டர் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்பதாகவும் கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது நான் நடிப்பதாக கூறினார். ஆனால் வெளியே வந்து தொடர்களில் எனக்கு நடிக்கவே தெரியவில்லை என்று கூறுகின்றனர். எனவே நான் விமர்சனங்களை தவிர்த்து விட தொடங்கினேன் .
எனக்கு மறுமணமாகி 12 ஆண்டுகள் ஆகியதாகவும் தன் கணவர் தன்னை விருப்பத்தோடு தான் திருமணம் செய்தார் என்றும் சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை பகிர்ந்தார். என் கணவரது குடிப்பழக்கத்தினால் நான் நிறைய துன்பங்களை அனுபவித்ததாகவும், இன்னும் நிறைய பெண்கள் துன்பத்தை அனுபவிப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.