பேட்ட வெளியாகி 10 நாட்களுக்குள் இப்படி ஒரு நிலைமையா? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்!
Petta movie telecast in government bus
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் பேட்ட திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் பேட்ட படம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அரசு பேருந்து ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பானதை, பேருந்தில் இருந்த ரஜினி ரசிகர் ஒருவர் படம் பிடித்து அதை ரஜினி ரசிகர் மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் விஷால், இதுபற்றி ஆதாரத்துடன் அரசுக்கு விளக்கியுள்ளார். மேலும் அந்த வீடீயோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.
மேலும் இதுபோன்ற காரியங்களால் பேட்ட படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என கூறி ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் ட்விட்டரில் அரசுக்கு இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளார். ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.