'பேட்ட' படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்ஸ்! உற்சாகத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்
Petta news updates about next song
2.0 படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கம் 2.0 ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 50 நாட்கள் இடைவெளியில் ரஜினியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் உருவான பேட்ட படத்தின் மரணமாஸ் பாடல் வரிகளுடன் கடந்த 3ஆம் தேதி வெளியானது. அனிருத் மற்றும் SPB குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் உண்மையாகவே மரணமாஸாக தான் இருக்கிறது.
ரசிகர்களை அதே உற்சாகத்தில் தக்க வைக்கும் நோக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது பேட்ட படத்தின் செய்திகளைப் பற்றி வெளியிட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, பேட்ட படத்தின் அடுத்த பாடல் நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.