ஆட்டோவில் ரஜினி! அடுத்தடுத்து வெளியாகும் "பேட்ட" ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Petta shooting spot stills leaked
பீட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.
பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மக்கள் இடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ரஜினியின் 165-வது படமான 'பேட்ட' படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட செகண்ட் லுக் போஸ்டரில் ரஜினி முறுக்கு மீசையுடன் இருக்கும் தோற்றத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் 2-வது போஸ்டரில் ரஜினிகாந்த் முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.