பெண்கள் பற்றி அப்படி லிரிக்ஸ் வைத்த கண்ணதாசன்.. கடுப்பாகி கட்டளை போட்ட முதலாளி.!
தவறை சுட்டிக்காட்டிய ஆசான்.! உடனே திருத்திக் கொண்ட கண்ணதாசன்.!
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் காலம் கடந்து நின்ற கவிஞர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். தன்னுடைய பாடல் வரிகள் மூலமாக வாழ்க்கையின் பல்வேறு தத்துவங்களை அவர் உணர்த்தினார். மனிதர்களிடையே ஏற்படும் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் தன்னுடைய பாடல் வரிகள் மூலமாக பதிலளித்தார். சிவாஜி, எம்ஜிஆர் போன்ற பல முன்னனி கதாநாயகர்களுக்கு தன்னுடைய கற்பனை வளம் மூலமாக பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
கண்ணதாசன் இது தொடர்பாக எழுதியுள்ளதாக அவருடைய மகன் அண்ணாதுரை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், '33 வருடங்களுக்கு முன்னர் என்னை மரியாதையோடு வரவேற்ற நகரம்தான் சேலம். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி டி. ஆர்.சுந்தரம் என்னை பத்திரிகை ஆசிரியராக ஏற்றுக் கொண்டார். அங்கிருந்து தான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமாயிற்று.
அந்த நாளில் எனக்கு ₹.125 சம்பளம் ஓ.ஏ.கே. தேவர், சீர்காழி கோவிந்தராஜன், கே.கே. சௌந்தர் எல்லோருக்குமே ₹.50 சம்பளம். அதிலிருந்து படிப்படியாக என்னை உயர்த்தினார் முதலாளி. இல்லற ஜோதிக்கு கதை, வசனம், பாடல்கள் நான் எழுதினேன். அப்போது டால்மியாபுரம் வழக்கு நடந்து கொண்டிருந்தது. முதலாளி லண்டன் போயிருந்தார். நாங்கள் கதையை எழுதி படத்தை முடித்து விட்டோம்.
அதிலே கதாநாயகன் கல்யாணமான ஒரு கவிஞன். இன்னொரு பெண்ணை அவன் தொட்டு விடுகிறான். உடனே அவன் கவிஞனுக்கே களங்கமில்லை என்று பாடுகிறான். லண்டனிலிருந்து திரும்பிய முதலாளி, பாட்டை கேட்டார் ஓஹோ கவிஞனாக இருந்தால் எந்த பெண்ணையும் தொடலாமோ, பாட்டை மாத்துடா என்றார். பிறகு களங்கமில்லாத காதலிலே என்று மாற்றினோம் என குறிப்பிட்டிருக்கிறார்.