பிகில் படத்திற்காக விஜய் ரசிகர்களின் மாறுபட்ட அர்பனிப்பு! காவல் துறை ஆணையர் பாராட்டு
police appriciate ti vijay fan
தமிழகத்தில் சினிமா கலாச்சாரம் அதிகமாக பெருகியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. திரையில் தலைவர்களாக நடிக்கும் நடிகர்களை நிஜ தலைவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் மணப்பாங்கு இங்கு அதிகம். இதனால் ரசிகர்ர மன்றம், அரசியல் கட்சி என அடுத்தடுத்த கட்டங்களுக்கு சில நடிகர்களும் ரசிகர்களும் நகர்கின்றனர்.
அத்தகைய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் கட்டவுட், பேனர், பாலாபிஷேகம் என ரசிகர்கள் ஏராளமாக செலவு செய்வது வழக்கம். ஆனால் இப்போது இந்த கலாச்சாரம் சிறிது சிறிதாக மாறி வருகிறது.
இதற்கு உதாரணமாக தற்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பிகில் பட வெளியீட்டை தொடர்ந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல் துணை ஆணையர் சரவணன் மற்றும் உதவி ஆணையர் சதீஷ் குமாரின் உதவியுடன் நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 12 இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டர்களை பொருத்தியுள்ளனர்.
விஜய் ரசிகர்களின் இந்த புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி குறித்து காவல் துணை ஆணையர் சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விஜய் ரசிகர்களை பாராட்டியுள்ளார். இந்த செயல் பலருக்கும் முன் உதாரணமாக உள்ளது. வீணாக பணத்தை செலவு செய்யாமல் இவ்வாறு பயனுல்ல வகையில் செலவு செய்தால் சமுதாயம் நிச்சயம் வளர்ச்சி அடையும். நன்றி நெல்லை விஜய் ரசிகர்களே!