தங்க நிற உடையில் மின்னும் பூஜா ஹெக்டே.. இணையத்தை சூடேற்றும் புகைப்படங்கள்!
தங்க நிற உடையில் மின்னும் பூஜா ஹெக்டே.. இணையத்தை சூடேற்றும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பூஜாஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால், இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.மேலும் தமிழில் பூஜா ஹெக்டே நடித்த திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவான நடிகையாக இருந்து வரும் பூஜா ஹெக்டே, அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். இதன்படி தற்போது இவர் தங்க நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.