ஆண்களைக் குறித்து சர்ச்சையாக பதிவிட்ட பூனம் பஜ்வா.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..
ஆண்களைக் குறித்து சர்ச்சையாக பதிவிட்ட பூனம் பஜ்வா திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் பூனம் பஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்பு சில வருடங்கள் திரை துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட பூனம் பஜ்வா, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழில் நடித்து வந்தார். ஆனால் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனை அடுத்து தெலுங்கு மொழி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஆண்களை குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்டார். அவர், "ஆண்கள் காப்பி குடிக்கலாமா என்று கூறினால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதை நம்பி நாம் ஏமாந்து செல்லக்கூடாது. மேலும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார். இப்படி இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.