இளம்பெண்ணை கற்பழித்த பிரபல கொரிய யூடியூபர் கைது: அதிர்ச்சியில் பின்தொடர்பாளர்கள்.!
இளம்பெண்ணை கற்பழித்த பிரபல கொரிய யூடியூபர் கைது: அதிர்ச்சியில் பின்தொடர்பாளர்கள்.!
தென் கொரியாவை சார்ந்த பிரபல யூடியூபர் சியோ வாங் ஜெயிங். இவர் யூடியூபில் Mama Guy என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறார். இந்நிலையில் இளம்பெண் ஒருவருக்கு மதுபானம் கொடுத்து அவர் மயக்க நிலையில் இருந்தபோது பெண்ணை யூடியூபர் மற்றும் அவரது நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை உறுதி செய்யவே, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.