அடேங்கப்பா.. நடிகர் பிரபுவின் மகள் திருமணத்திற்கு பின் என்ன தொழில் செய்கிறார் பார்த்தீங்களா.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
அடேங்கப்பா.. நடிகர் பிரபுவின் மகள் திருமணத்திற்கு பின் என்ன தொழில் செய்கிறார் பார்த்தீங்களா.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக, சகாப்தமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபு. இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரு பிள்ளைகள் உள்ளனர்.
விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவர் அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், கமல், அஜித் விஜய் என பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா கேக் தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா மெல்ட்ஸ் டெசர்ட் என்ற நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பெயரில் கேக் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும் அவர் மெல்ட் டெசர்ட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கி தான் தயாரிக்கும் கேக்குகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.