பிரபுதேவாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்..
பிரபுதேவாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்..
நடனக் கலைஞராக திரைத் துறையில் அறிமுகமானவர் பிரபுதேவா. இவர் பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். ஆரம்பத்தில் நடன ஆசிரியராகப் பணியாற்றிய பிரபு தேவா, 1989ஆம் ஆண்டு "இந்து" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
ஜென்டில் மேன் படத்தில் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடலுக்கு இவர் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் மின்சாரக்கனவு படத்தில் "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலில் இவரது நடனத்திற்காக இந்திய தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார் பிரபு தேவா.
"இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்" என்று அனைவராலும் புகழப்படும் பிரபு தேவா, தமிழில் விஜய் நடித்த "போக்கிரி" படத்தில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய தமிழ் படங்களையும், மேலும் சில தெலுங்கு, ஹிந்திப் படங்களையும் இயக்கியுள்ளார்.
இவருக்கு ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபுதேவா தனது சகோதரர்களுடன் குடும்பமாக உள்ள சிறுவயதுப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.