23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர், நடிகை! யார் தெரியுமா?
Prabu and Mathumitha joining after 23 years in new movie
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு. 90 காலகட்டங்களில் படஙக்ளில் ஹீரோவாக இருந்த இவர் தற்போது குணசித்ர நடிகராக நடித்துவருகிறார். சமீபத்தில் சார்லி சாப்ளின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கல்லூரி குமார் என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரபு.
இந்த படத்தில் நடிகர் பிரபுவுடன் பிரபல நடிகை மதுபாலா நடிக்க உள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். பாஞ்சாலங்குறிச்சி படம் வெளியாக 23 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் கல்லூரி குமார் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த படம் குறித்து பேசிய நடிகர் பிரபு கூறுகையில் பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று நகைச்சுவையுடன் படம் சொல்கிறது’’ என்றார்.