நன்றி மறந்த லவ் டுடே பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
நன்றி மறந்த லவ் டுடே பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கி, நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ஓ மை காட் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக பிரதீப் 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனது சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் ரசிகர்கள் பலரும் நன்றி மறந்த பிரதீப் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.