எனக்கா ரெட் கார்டு.. பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் செய்துள்ளதை பார்த்தீர்களா.! வைரல் புகைப்படங்கள்!!
எனக்கா ரெட் கார்டு.. செம ஜாலியாக பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் செய்துள்ளதை பார்த்தீர்களா.! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், ஆகியோர் வெளியேறினர்.
மேலும் நேற்று வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த அன்னபாரதி குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். இதற்கிடையில் போட்டியாளரான பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் மீது சகப் போட்டியாளர்கள் டபுள் மீனிங்கில் தகாத வார்த்தை பேசுகிறார், இரவில் தூங்க பயமாக இருக்கிறது என பல குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் ஏற்றுக்கொள்ள முடியாது எவிக்சன் என கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை கொண்டாடி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.