நடிகர் பிரகாஷ் திட்டியவர்கள் குறித்து.. அவரின் நெத்தியடி பதிவு.!
நடிகர் பிரகாஷ் திட்டியவர்கள் குறித்து.. அவரின் நெத்தியடி பதிவு.!
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், சமீபத்தில் " மலையாள டீக்கடைக்காரருக்கு என்ன நடந்தது என்று புரியாமல் கொந்தளிக்கும் சிலருக்கு.. அவர் ரொம்ப புத்திசாலியானவர். உங்களால் முடிந்தால் அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள்"என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில்,"விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்" என்று பதிவிட்டு, அதில் ஒருவர் டீயை ஆற்றுவது போலவும் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவு சந்திரயான்-3 திட்டத்தை ட்ரோல் செய்யும்படி இருப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு எப்போதும் வெறுப்பையே காணும். மலையாள டீக்கடைக்காரர்களை கிண்டல் செய்யும் பதிவே அது.
உங்களால் ஒரு நகைச்சுவையைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் இன்னும் வளர வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் அவர், "சந்திரயான் வெற்றிக்கு பாடுபட்ட அனைவர்க்கும் நன்றி. இது நமக்கு பெருமையான தருணம்" என்றும் பதிவில் கூறியிருந்தார்.